×
البقرةவசனம் 120

அல்-முக்தஸர்

وَلَن تَرْضَىٰ عَنكَ ٱلْيَهُودُ وَلَا ٱلنَّصَـٰرَىٰ حَتَّىٰ تَتَّبِعَ مِلَّتَهُمْ ۗ قُلْ إِنَّ هُدَى ٱللَّهِ هُوَ ٱلْهُدَىٰ ۗ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم بَعْدَ ٱلَّذِى جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ ۙ مَا لَكَ مِنَ ٱللَّهِ مِن وَلِىٍّ وَلَا نَصِيرٍ ﴿١٢٠﴾

அல்லாஹ் தன் தூதரை விளித்து அவருக்குப் பின்வருமாறு எச்சரிக்கிறான்: நீர் இஸ்லாத்தை விட்டுவிட்டு அவர்களது கொள்கையை பின்பற்றும் வரை யூதர்களோ, கிருஸ்தவர்களோ உம்மைக் குறித்து திருப்தியடைய மாட்டார்கள். நிச்சயமாக அல்லாஹ்வின் வேதமும் அவனது தெளிவும்தான் உண்மையான நேர்வழியாகும். மாறாக அவர்களிருக்கும் அசத்தியமல்ல. தெளிவான சத்தியம் உம்மிடம் வந்தபிறகு உம்மிடமிருந்தோ, உம்மைப் பின்பற்றியவர்களிடமிருந்தோ இவ்வாறு நிகழ்ந்துவிட்டால் அல்லாஹ்விடமிருந்து எந்த உதவியையும் நீர் பெறமாட்டீர். இது சத்தியத்தை விட்டுவிட்டு அசத்தியவாதிகளோடு சேர்ந்துவிடுவதால் ஏற்படும் ஆபத்தை தெளிவுபடுத்துகிறது.