×
البقرةவசனம் 134

அல்-முக்தஸர்

تِلْكَ أُمَّةٌ قَدْ خَلَتْ ۖ لَهَا مَا كَسَبَتْ وَلَكُم مَّا كَسَبْتُمْ ۖ وَلَا تُسْـَٔلُونَ عَمَّا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿١٣٤﴾

அந்த சமூகம் உங்களுக்கு முன்னால் சென்ற சமூகங்களுடன் கடந்துவிட்டது. அவர்கள் செய்த செயல்களின் பக்கம் அவர்கள் சென்றுவிட்டார்கள். அவர்கள் சம்பாதித்த நன்மையும் தீமையும் அவர்களுக்கு. நீங்கள் சம்பாதித்தது உங்களுக்கு. அவர்களின் செயல்களைக் குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள். உங்களின் செயல்களைக் குறித்து அவர்கள் விசாரிக்கப்பட மாட்டார்கள். எவரும் மற்றவரின் பாவத்திற்காக தண்டிக்கப்பட மாட்டார். மாறாக ஒவ்வொருவரும் அவர்களின் செயல்களுக்கேற்ப கூலி வழங்கப்படுவார்கள். உங்களின் செயல்களை விட்டுவிட்டு உங்களுக்கு முன்னர் வாழ்ந்த மற்றவர்களின் செயல்களைக் குறித்து ஆர்வம் காட்டாதீர்கள். அல்லாஹ்வின் கருணைக்குப் பின் ஒருவர் செய்த நற்செயல்தான் அவருக்குப் பயனளிக்கக்கூடியது.