அல்-முக்தஸர்
قُولُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِىَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ ﴿١٣٦﴾
நம்பிக்கையாளர்களே, தவறான வாதம்புரியும் யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கூறுங்கள், நாங்கள் அல்லாஹ்வின் மீதும் அவன் எங்களுக்கு இறக்கிய குர்ஆனின் மீதும் நம்பிக்கைகொண்டோம். இப்ராஹீம், அவரது பிள்ளைகளான இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு ஆகியோருக்கு இறக்கப்பட்டதன் மீதும் யஅகூபின் சந்ததிகளில் தூதர்களாக வந்தவர்களுக்கு இறக்கப்பட்டதன்மீதும் அல்லாஹ் மூசாவுக்கு வழங்கிய தவ்ராத்தின்மீதும் ஈசாவுக்கு வழங்கிய இன்ஜீலின்மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அனைத்து இறைத்தூதர்கள் மீதும் இறக்கப்பட்ட வேதங்களின் மீதும் நாங்கள் நம்பிக்கைகொண்டோம். அவர்களில் சிலரை ஏற்று, சிலரை நிராகரித்து அவர்களிடையே நாங்கள் பாகுபாடு காட்ட மாட்டோம். அவர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்வோம். அவன் ஒருவனுக்கு மாத்திரமே நாங்கள் அடிபணிந்தவர்களாக இருக்கின்றோம்.