×
البقرةவசனம் 140

அல்-முக்தஸர்

أَمْ تَقُولُونَ إِنَّ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَـٰعِيلَ وَإِسْحَـٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطَ كَانُوا۟ هُودًا أَوْ نَصَـٰرَىٰ ۗ قُلْ ءَأَنتُمْ أَعْلَمُ أَمِ ٱللَّهُ ۗ وَمَنْ أَظْلَمُ مِمَّن كَتَمَ شَهَـٰدَةً عِندَهُۥ مِنَ ٱللَّهِ ۗ وَمَا ٱللَّهُ بِغَـٰفِلٍ عَمَّا تَعْمَلُونَ ﴿١٤٠﴾

அல்லது வேதக்காரர்களே! இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூபு மற்றும் யஃகூபின் சந்ததிகளில் வந்த தூதர்கள் அனைவரும் யூதர்களாக அல்லது கிருஸ்தவர்களாக இருந்தார்கள் என்று கூறுகிறீர்களா? தூதரே! அவர்களிடம் நீர் கேளும், நீங்கள் நன்கறிந்தவர்களா? அல்லது அல்லாஹ்வா? என்று. அந்த தூதர்கள் இவர்கள் மார்க்கத்தில்தான் இருந்தார்கள் என்று இவர்கள் கூறினால் இவர்கள் பொய்கூறியவர்களாவர். ஏனெனில் தவ்ராத், இன்ஜீல் இறக்கப்படுவதற்கு முன்னரே அவர்கள் வாழ்ந்து மரணித்துவிட்டார்களே!? எனவே இந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதர்களின்மீதும் பொய் கூறுகிறார்கள் என்பதும் அவர்கள் தங்களுக்கு இறக்கப்பட்ட சத்தியத்தை மறைத்தார்கள் என்பதும் தெளிவாகிவிட்டது. வேதக்காரர்களைப்போன்று அல்லாஹ்விடமிருந்து அறிந்த சாட்சியத்தை மறைப்பவர்களைவிட அநியாயக்காரர்கள் வேறு யாருமில்லை. நீங்கள் செய்கின்ற செயல்களை அல்லாஹ் கவனிக்காமலில்லை. அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்கு கூலி வழங்குவான்.