×
البقرةவசனம் 145

அல்-முக்தஸர்

وَلَئِنْ أَتَيْتَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَـٰبَ بِكُلِّ ءَايَةٍ مَّا تَبِعُوا۟ قِبْلَتَكَ ۚ وَمَآ أَنتَ بِتَابِعٍ قِبْلَتَهُمْ ۚ وَمَا بَعْضُهُم بِتَابِعٍ قِبْلَةَ بَعْضٍ ۚ وَلَئِنِ ٱتَّبَعْتَ أَهْوَآءَهُم مِّنۢ بَعْدِ مَا جَآءَكَ مِنَ ٱلْعِلْمِ ۙ إِنَّكَ إِذًا لَّمِنَ ٱلظَّـٰلِمِينَ ﴿١٤٥﴾

தூதரே! வேதம் வழங்கப்பட்ட யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் கிப்லா மாற்றம் உண்மையானது என்று கூறும் அனைத்துவிதமான ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டுவந்தாலும் கர்வத்தினாலும் பிடிவாதத்தினாலும் உமது கிப்லாவை முன்னோக்க மாட்டார்கள். அல்லாஹ் உம்மை அவர்களின் கிப்லாவை விட்டும் திருப்பிய பிறகு நீரும் அதனை முன்னோக்கக்கூடியவர் அல்ல. அவர்களில் சிலர் வேறு சிலரின் கிப்லாவை முன்னோக்கக்கூடியவர்களும் அல்ல. ஏனெனில் அவர்களில் ஒவ்வொரு பிரிவினரும் மற்ற பிரிவினரை நிராகரிப்பாளர்களாகக் கருதுகின்றார்கள். சந்தேகமற்ற சரியான ஞானம் உம்மிடம் வந்தபிறகு கிப்லாவின் விஷயத்திலும் சட்டதிட்டங்களிலும் நீர் அவர்களின் மனவிருப்பங்களை பின்பற்றினால் - நேர்வழியை விட்டுவிட்டு மனஇச்சையை பின்பற்றியதனால் நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். நபியவர்களை விளித்து கூறப்பட்ட இந்த விஷயம் அந்த மக்களைப் பின்பற்றுவதன் விபரீதத்தை எடுத்துரைப்பதற்காகத்தான். இல்லாவிட்டால் அல்லாஹ் தன் தூதரை அவ்வாறு பின்பற்றுவதிலிருந்து பாதுகாத்துள்ளான். இது நபியவர்களுக்குப் பின் அவர்களின் சமூகத்தை எச்சரிப்பதற்காகத்தான்.