அல்-முக்தஸர்
ٱللَّهُ يَسْتَهْزِئُ بِهِمْ وَيَمُدُّهُمْ فِى طُغْيَـٰنِهِمْ يَعْمَهُونَ ﴿١٥﴾
அல்லாஹ்வை நம்பிக்கைகொண்டவர்களை இவர்கள் பரிகாசம் செய்ததற்குப் பகரமாக அல்லாஹ்வும் இவர்களைப் பரிகாசம் செய்கிறான். இவர்களின் செயல்களுக்கு ஏற்ற கூலியைத்தான் இவ்வாறு கொடுக்கிறான். இதனால் இவர்களின் விஷயத்தில் முஸ்லிம்களுக்குரிய சட்டத்தையே இவ்வுலகில் நடைமுறைப்படுத்துகிறான். மறுமையிலோ இவர்களின் நிராகரிப்புக்கும் நயவஞ்சகத்திற்குமான கூலியைக் கொடுத்துவிடுவான். இவர்களுக்கு அவன் அவகாசம் கொடுத்திருப்பதின் நோக்கமே, இவர்கள் வழிகேட்டில் முன்னேறிக்கொண்டே சென்று தடுமாறியவர்களாக நிலைத்திருக்கட்டும் என்பதற்குத்தான்.