அல்-முக்தஸர்
وَلَنَبْلُوَنَّكُم بِشَىْءٍ مِّنَ ٱلْخَوْفِ وَٱلْجُوعِ وَنَقْصٍ مِّنَ ٱلْأَمْوَٰلِ وَٱلْأَنفُسِ وَٱلثَّمَرَٰتِ ۗ وَبَشِّرِ ٱلصَّـٰبِرِينَ ﴿١٥٥﴾
எதிரிகள் குறித்த பயம், உணவுப்பற்றாக்குறையால் ஏற்படும் பசி, அழிதல் அல்லது பெறுவதற்கு சிரமம் ஆகியவற்றால் செல்வம் குறைதல், பேரழிவுகளினால் அல்லது அல்லாஹ்வின் பாதையில் வீரமரணம் அடைதலினால் ஏற்படும் உயிர்ச்சேதம், பூமியில் விளையும் பழங்களின் பற்றாக்குறை ஆகிய பல்வேறு துன்பங்களால் நிச்சயம் நாம் உங்களைச் சோதிப்போம். தூதரே! இத்தகைய துன்பங்களை பொறுமையாக எதிர்கொள்பவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் மகிழ்ச்சி காத்திருக்கின்றது என்ற நற்செய்தியைக் கூறுவீராக.