×
البقرةவசனம் 158

அல்-முக்தஸர்

إِنَّ ٱلصَّفَا وَٱلْمَرْوَةَ مِن شَعَآئِرِ ٱللَّهِ ۖ فَمَنْ حَجَّ ٱلْبَيْتَ أَوِ ٱعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ ٱللَّهَ شَاكِرٌ عَلِيمٌ ﴿١٥٨﴾

கஅபாவிற்கு அருகில் அமைந்துள்ள ஸஃபா,மர்வா என்ற இரு மலைகளும் மார்க்கத்தின் வெளிப்படையான அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும். யார் ஹஜ் அல்லது உம்ரா செய்ய நாடுகிறாரோ அவர் அவ்விரண்டிற்குமிடையே வலம் வருவதில் (சயீ செய்தல்) எந்தக் குற்றமும் இல்லை. இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் மக்கள் அவ்விரண்டிற்குமிடையே "சயீ" செய்துவந்தார்கள். இஸ்லாத்தை ஏற்றபிறகு அவ்வாறு செய்வதில் முஸ்லிம்களில் சிலருக்கு ஏற்பட்ட தயக்கத்தை அகற்றுவதற்காகவே அது தவறில்லை, அவையிரண்டும் ஹஜ்ஜின் வணக்கங்களில் உள்ளவைதான் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். எவர் அல்லாஹ் கடமையாக்காத உபரியான வணக்கங்களில் அவனுக்காக ஈடுபடுவாரோ அவரிடமிருந்து அவற்றை அவன் ஏற்றுக்கொள்வான், அவருக்குத் தகுந்த வெகுமதியும் அளித்திடுவான். நற்செயல் புரிபவர்களையும், கூலி பெறுவதற்கு தகுதியானவர்களையும் அவன் நன்கறிந்தவன்.