அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلنَّاسُ كُلُوا۟ مِمَّا فِى ٱلْأَرْضِ حَلَـٰلًا طَيِّبًا وَلَا تَتَّبِعُوا۟ خُطُوَٰتِ ٱلشَّيْطَـٰنِ ۚ إِنَّهُۥ لَكُمْ عَدُوٌّ مُّبِينٌ ﴿١٦٨﴾
மனிதர்களே! பூமியிலுள்ள விலங்குகள், தாவரங்கள், மரங்கள் ஆகியவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட முறையில் சம்பாதிக்கப்பட்ட, அசுத்தமற்ற தூய்மையானவைகளை உண்ணுங்கள். உங்களைத் தந்திரமாகத் தன்பக்கம் ஈர்க்கும் ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாவான். தனக்கு தீங்கிழைக்க, தனக்குத் தீங்கிழைக்கவும் தன்னை வழிகெடுக்கவும் நினைக்கின்ற தன் எதிரியைப் பின்பற்றுவது ஒரு அறிவாளிக்கு உகந்ததல்ல.