×
البقرةவசனம் 17

அல்-முக்தஸர்

مَثَلُهُمْ كَمَثَلِ ٱلَّذِى ٱسْتَوْقَدَ نَارًا فَلَمَّآ أَضَآءَتْ مَا حَوْلَهُۥ ذَهَبَ ٱللَّهُ بِنُورِهِمْ وَتَرَكَهُمْ فِى ظُلُمَـٰتٍ لَّا يُبْصِرُونَ ﴿١٧﴾

இந்த நயவஞ்சகர்களுக்கு நெருப்பைக் கொண்டும் நீரைக் கொண்டும் அல்லாஹ் இரண்டு உதாரணங்களைக் கூறுகிறான். நெருப்பைக் கொண்டு கூறப்படும் உதாரணம், அவர்கள் வெளிச்சம் பெறுவதற்காக நெருப்பை மூட்டினார்கள். அது ஒளி வீசி அதிலிருந்து அவர்கள் பயனடைய எண்ணியபோது அந்த ஒளி அணைந்து வெப்பம் மட்டுமே எஞ்சிவிட்டது. இதன் விளைவாக, அவர்கள் எதையும் பார்க்கவோ, எந்த வழியையும் அறியவோ முடியாத இருட்டில் மூழ்கிவிட்டார்கள்.