அல்-முக்தஸர்
وَمَثَلُ ٱلَّذِينَ كَفَرُوا۟ كَمَثَلِ ٱلَّذِى يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَآءً وَنِدَآءً ۚ صُمٌّۢ بُكْمٌ عُمْىٌ فَهُمْ لَا يَعْقِلُونَ ﴿١٧١﴾
நிராகரிப்பாளர்கள் தங்களின் முன்னோர்களைப் பின்பற்றுவதற்கான உதாரணம், தனது கால்நடையைக் கத்திக்கத்தி அழைக்கும் இடையனைப் போன்றது. அவை அவனுடைய சப்தத்தை செவியுறுகின்றன. ஆனால் அவனுடைய பேச்சை புரிந்துகொள்வதில்லை. அவர்கள் சத்தியத்தை செவியுற்று அதைக்கொண்டு பயனடைய முடியாத செவிடர்கள். உண்மையைப் பேச முடியாத ஊமைகள். அதனைக் காணமுடியாத குருடர்கள். எனவே நீர் அழைக்கும் நேர்வழியை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது.