அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ يَكْتُمُونَ مَآ أَنزَلَ ٱللَّهُ مِنَ ٱلْكِتَـٰبِ وَيَشْتَرُونَ بِهِۦ ثَمَنًا قَلِيلًا ۙ أُو۟لَـٰٓئِكَ مَا يَأْكُلُونَ فِى بُطُونِهِمْ إِلَّا ٱلنَّارَ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ ﴿١٧٤﴾
யூதர்களும் கிருஸ்தவர்களும் செய்வது போன்று அல்லாஹ் இறக்கிய வேதங்களையும் அவற்றில் உள்ள சத்தியம் மற்றும் முஹம்மது நபியைக் குறித்து உள்ளவற்றையும் பணம், பதவி போன்ற அற்ப ஆதாயங்களுக்காக மறைப்போர் உண்மையில் அவர்கள் நரக வேதனைக்கு காரணமாக அமையக்கூடியவற்றைத்தான் தங்கள் வயிறுகளில் நிரப்பிக் கொள்கிறார்கள். மறுமைநாளில் அவர்கள் விரும்பும் விஷயத்தைக் கொண்டு அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான்; மாறாக கவலையூட்டும் விதமாகவே பேசுவான். அவர்களைத் தூய்மைப்படுத்தவோ பாராட்டவோ மாட்டான். அவர்களுக்கு வேதனைமிக்க தண்டனைதான் உண்டு.