×
البقرةவசனம் 177

அல்-முக்தஸர்

لَّيْسَ ٱلْبِرَّ أَن تُوَلُّوا۟ وُجُوهَكُمْ قِبَلَ ٱلْمَشْرِقِ وَٱلْمَغْرِبِ وَلَـٰكِنَّ ٱلْبِرَّ مَنْ ءَامَنَ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ وَٱلْمَلَـٰٓئِكَةِ وَٱلْكِتَـٰبِ وَٱلنَّبِيِّـۧنَ وَءَاتَى ٱلْمَالَ عَلَىٰ حُبِّهِۦ ذَوِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينَ وَٱبْنَ ٱلسَّبِيلِ وَٱلسَّآئِلِينَ وَفِى ٱلرِّقَابِ وَأَقَامَ ٱلصَّلَوٰةَ وَءَاتَى ٱلزَّكَوٰةَ وَٱلْمُوفُونَ بِعَهْدِهِمْ إِذَا عَـٰهَدُوا۟ ۖ وَٱلصَّـٰبِرِينَ فِى ٱلْبَأْسَآءِ وَٱلضَّرَّآءِ وَحِينَ ٱلْبَأْسِ ۗ أُو۟لَـٰٓئِكَ ٱلَّذِينَ صَدَقُوا۟ ۖ وَأُو۟لَـٰٓئِكَ هُمُ ٱلْمُتَّقُونَ ﴿١٧٧﴾

கிழக்குத் திசையையோ மேற்குத் திசையையோ வெறுமனே முன்னோக்குவதும் அதில் முரண்பட்டுக்கொள்வதும் அல்லாஹ்வுக்குப் பிடித்தமான நன்மை அல்ல. உண்மையில் நன்மை என்பது, ஒரே இறைவனான அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் வானவர்கள் அனைவரின் மீதும் இறக்கப்பட்ட வேதங்கள் அனைத்தின்மீதும், பாகுபாடின்றி தூதர்கள் அனைவரின்மீதும் நம்பிக்கைகொள்வதும், செல்வத்தின்மீது மோகம் இருந்தும் அதை உறவினர்களுக்காக, அநாதைகளுக்காக, ஏழைகளுக்காக, குடும்பத்தையும் நாட்டையும் விட்டு துண்டிக்கப்பட்ட வழிப்போக்கர்களுக்காக, மக்களிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்ட வறியவர்களுக்காக, அடிமைகளையும் கைதிகளையும் விடுதலை செய்வதற்காக செலவு செய்வதும், அல்லாஹ் கட்டளையிட்டபடி தொழுகையை முழுமையாகக் கடைப்பிடிப்பதும், கடமையாக்கப்பட்ட ஸகாத்தை வழங்குவதும், வாக்குறுதி அளித்தால் அதை முழுமையாக நிறைவேற்றுவதும், வறுமை, நோய் போன்றவற்றை சகித்துக்கொள்வதும், போர் உக்கிரமடையும் போது விரண்டோடாமல் பொறுமையாக இருப்பதும் ஆகும். இத்தகைய பண்புகளைப் பெற்றவர்கள்தாம் தங்களுடைய ஈமானிலும் செயல்பாடுகளிலும் அல்லாஹ்வுக்கு உண்மையாக இருப்பவர்கள். இவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளைகளை நிறைவேற்றி, அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்கள்.