அல்-முக்தஸர்
كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا ٱلْوَصِيَّةُ لِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ بِٱلْمَعْرُوفِ ۖ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ ﴿١٨٠﴾
நீங்கள் மரண வேளையை நெருங்கிவிட்டால், நீங்கள் ஏராளமான செல்வங்களை விட்டுச் செல்பவர்களாக இருந்தால் தாய்தந்தையருக்கும், உறவினருக்கும் - இறைவன் விதித்தபடி - மூன்றில் ஒரு பகுதியை விட அதிகமின்றி உயில் எழுதிவிடுங்கள். இவ்வாறு செய்வது அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்கள்மீது கட்டாயக் கடமையாகும். இது வாரிசுரிமை தொடர்பாக வசனங்கள் இறங்குவதற்கு முன்னுள்ள சட்டமாகும். வாரிசுரிமை தொடர்பான வசனங்கள் இறங்கிய பிறகு யார் எந்தளவு அனந்தரம் பெறுவார் என்பது தெளிவுபடுத்தப்பட்டு விட்டது.