அல்-முக்தஸர்
وَقَـٰتِلُوا۟ فِى سَبِيلِ ٱللَّهِ ٱلَّذِينَ يُقَـٰتِلُونَكُمْ وَلَا تَعْتَدُوٓا۟ ۚ إِنَّ ٱللَّهَ لَا يُحِبُّ ٱلْمُعْتَدِينَ ﴿١٩٠﴾
அல்லாஹ்வின் பாதையை விட்டும் உங்களைத் தடுப்பதற்காக உங்களுடன் போரிடும் நிராகரிப்பாளர்களுடன் அல்லாஹ்வின் வாக்கை மேலோங்கச் செய்வதற்காக போரிடுங்கள். போர்க்களத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றோரைக் கொன்றோ இறந்தவர்களைச் சித்திரவதை செய்தோ வரம்புமீறிவிடாதீர்கள். அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளை மீறக்கூடியவர்களை அவன் ஒருபோதும் நேசிப்பதில்லை.