அல்-முக்தஸர்
وَقَـٰتِلُوهُمْ حَتَّىٰ لَا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ ٱلدِّينُ لِلَّهِ ۖ فَإِنِ ٱنتَهَوْا۟ فَلَا عُدْوَٰنَ إِلَّا عَلَى ٱلظَّـٰلِمِينَ ﴿١٩٣﴾
நிராகரிப்பவர்கள், இணைவைப்பையும், அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதையும் நிராகரிப்பதையும் விட்டுவிடும்வரையும், அல்லாஹ்வுடைய மார்க்கம் மிகைக்கும் வரையும் அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுப்பதையும், அவனை நிராகரிப்பதையும் விட்டுவிட்டால் நீங்களும் விலகிக் கொள்ளுங்கள்; அவர்களுடன் போரிடாதீர்கள். அல்லாஹ்வின் பாதையை விட்டு மக்களைத் தடுத்து அவனை நிராகரிக்கும் அநியாயக்காரர்களைத்தவிர வேறு யாரிடமும் பகைமை இல்லை.