×
البقرةவசனம் 199

அல்-முக்தஸர்

ثُمَّ أَفِيضُوا۟ مِنْ حَيْثُ أَفَاضَ ٱلنَّاسُ وَٱسْتَغْفِرُوا۟ ٱللَّهَ ۚ إِنَّ ٱللَّهَ غَفُورٌ رَّحِيمٌ ﴿١٩٩﴾

பின்னர் நீங்கள் இப்ராஹீம் (அலை) அவர்களைப் பின்பற்றியோர் செய்வதைப்போல அரஃபாவிலிருந்து செல்லுங்கள். இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக்கால மக்கள் செய்ததைப்போன்று அங்கு தரிப்பதை விட்டு விடவேண்டாம். அல்லாஹ் விதித்ததை நிறைவேற்றியபோது உங்களிடம் நிகழ்ந்த குறைகளுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள். பாவமன்னிப்புக்கோரும் தன் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன். அவர்கள் விஷயத்தில் அவன் மிகுந்த கருணையாளனாக இருக்கின்றான்.