அல்-முக்தஸர்
هَلْ يَنظُرُونَ إِلَّآ أَن يَأْتِيَهُمُ ٱللَّهُ فِى ظُلَلٍ مِّنَ ٱلْغَمَامِ وَٱلْمَلَـٰٓئِكَةُ وَقُضِىَ ٱلْأَمْرُ ۚ وَإِلَى ٱللَّهِ تُرْجَعُ ٱلْأُمُورُ ﴿٢١٠﴾
சத்தியப் பாதையை விட்டுவிட்டு ஷைத்தானின் வழிகளைப் பின்பற்றும் இவர்கள், மறுமைநாளில் அல்லாஹ் தன் கண்ணியத்திற்கேற்றபடி மேகத்தின் நிழல்களில் அவர்களிடையே தீர்ப்பு அளிப்பதற்காக வருவதைத்தான் எதிர்பார்க்கிறார்கள். அப்போது வானவர்கள் எல்லா புறங்களிலிருந்தும் அவர்களைச் சூழ்ந்துவிடுவார்கள். அப்போது அல்லாஹ்வின் கட்டளை அவர்களிடையே நிறைவேற்றப்படும். படைப்புகளின் விஷயங்கள் அல்லாஹ்வின் பக்கமே திரும்புகின்றன.