×
البقرةவசனம் 22

அல்-முக்தஸர்

ٱلَّذِى جَعَلَ لَكُمُ ٱلْأَرْضَ فِرَٰشًا وَٱلسَّمَآءَ بِنَآءً وَأَنزَلَ مِنَ ٱلسَّمَآءِ مَآءً فَأَخْرَجَ بِهِۦ مِنَ ٱلثَّمَرَٰتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا۟ لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ ﴿٢٢﴾

அவன்தான் உங்களுக்காகப் பூமியை விரிப்பாகவும், அதற்கு மேலே வானத்தை நன்கு கட்டமைக்கப்பட்ட முகடாகவும் ஆக்கினான். அவனே மழையைப் பொழிய வைத்து அருட்கொடைகளை அளிப்பவன். அதன் மூலம் பல வகையான தாவரங்களை முளைக்கச் செய்து உங்களுக்கு வாழ்வாதாரம் வழங்குபவன். எனவே, அவனைத்தவிர வேறு படைப்பாளி எவனுமில்லை என்பதை அறிந்துகொண்டே அவனுக்கு இணைகளையோ பங்காளிகளையோ ஏற்படுத்திவிடாதீர்கள்.