×
البقرةவசனம் 224

அல்-முக்தஸர்

وَلَا تَجْعَلُوا۟ ٱللَّهَ عُرْضَةً لِّأَيْمَـٰنِكُمْ أَن تَبَرُّوا۟ وَتَتَّقُوا۟ وَتُصْلِحُوا۟ بَيْنَ ٱلنَّاسِ ۗ وَٱللَّهُ سَمِيعٌ عَلِيمٌ ﴿٢٢٤﴾

அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்து; நன்மையான, இறையச்சமுள்ள செயல், மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துதல் ஆகிய செயல்களுக்குத் தடையை எற்படுத்திக்கொள்ளவேண்டாம். நீங்கள் நன்மையான ஒரு செயலை விட்டுவிடுவதற்கு சத்தியம் செய்தால் அதனை விட்டுவிடாமல் செய்துவிடுங்கள். சத்தியத்திற்காக பரிகாரம் செய்துவிடுங்கள். நீங்கள் பேசக்கூடியவற்றை அல்லாஹ் செவியேற்கக்கூடியவன்; உங்களின் செயல்களை அவன் நன்கறிந்தவன். அவற்றிற்கேற்ப அவன் உங்களுக்குக் கூலி வழங்குவான்.