×
البقرةவசனம் 235

அல்-முக்தஸர்

وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُم بِهِۦ مِنْ خِطْبَةِ ٱلنِّسَآءِ أَوْ أَكْنَنتُمْ فِىٓ أَنفُسِكُمْ ۚ عَلِمَ ٱللَّهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَـٰكِن لَّا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّآ أَن تَقُولُوا۟ قَوْلًا مَّعْرُوفًا ۚ وَلَا تَعْزِمُوا۟ عُقْدَةَ ٱلنِّكَاحِ حَتَّىٰ يَبْلُغَ ٱلْكِتَـٰبُ أَجَلَهُۥ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ يَعْلَمُ مَا فِىٓ أَنفُسِكُمْ فَٱحْذَرُوهُ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَفُورٌ حَلِيمٌ ﴿٢٣٥﴾

கணவனை இழந்தோ விவாகரத்து செய்யப்பட்டோ இத்தாவில் காத்திருக்கும் பெண்களிடம் நேரிடையாக அல்லாமல் சாடைமாடையாக உங்கள் விருப்பத்தைத் தெரிவிப்பதிலோ (உதாரணமாக, உன்னுடைய தவணை முடிந்துவிட்டால் எனக்குத் தகவல் தெரிவி) உங்கள் உள்ளத்தில் அந்தப் பெண்களை மணமுடிக்க வேண்டும் என்று ஆசைகொள்வதிலோ எந்தக் குற்றமும் இல்லை. அவர்களின் மீது உங்களுக்குள்ள கடுமையான விருப்பத்தினால் அவர்களை நீங்கள் நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிந்துவைத்துள்ளான். எனவேதான் வெளிப்படையாக இன்றி சாடையாக உங்களது விருப்பத்தைத் தெரிவிப்பதற்கு அனுமதித்துள்ளான். அவ்வாறின்றி இத்தாவில் காத்திருக்கும்போது அவர்களிடம் இரகசியமாக வாக்களிக்கவும் வேண்டாம்; திருமண ஒப்பந்தம் செய்யவும் வேண்டாம். அறிந்துகொள்ளுங்கள்! உங்கள் உள்ளத்தில் மறைத்து வைத்துள்ள அனுமதிக்கப்பட்ட, தடைசெய்யப்பட்ட ஆசைகளையும் அவன் அறிவான்.எனவே எச்சரிக்கையாக இருங்கள். அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்பட்டுவிடாதீர்கள். அறிந்துகொள்ளுங்கள், தன்னிடம் பாவமன்னிப்புக்கோரும் அடியார்களை அல்லாஹ் மன்னிக்கக்கூடியவன்; அவன் சகிப்புத்தன்மைமிக்கவன்; அவசரப்பட்டு தண்டித்துவிட மாட்டான்.