அல்-முக்தஸர்
وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا وَصِيَّةً لِّأَزْوَٰجِهِم مَّتَـٰعًا إِلَى ٱلْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ ۚ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِى مَا فَعَلْنَ فِىٓ أَنفُسِهِنَّ مِن مَّعْرُوفٍ ۗ وَٱللَّهُ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٤٠﴾
உங்களில் மனைவியரை விட்டுவிட்டு மரணமடைபவர்கள், ஒருவருடம்வரை முழுமையாக அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் போன்ற செலவீனங்கள் வழங்கப்பட வேண்டும் என்று மரணசாசனம் செய்யட்டும். அந்தப் பெண்ணின் துக்கத்தைத் துடைக்குமுகமாகவும் இறந்தவரின் உயிலை நிறைவேற்றுவதற்காகவும் அவரது வாரிசுகள் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றக்கூடாது. அந்தப் பெண்கள் தாமாகவே வெளியேறி தங்களை அலங்கரித்துக் கொண்டால் அவர்கள்மீதோ உங்கள்மீதோ எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன். அவனை யாராலும் மிகைக்க முடியாது. அவன் ஏற்படுத்திய விதிகளில், திட்டமிடலில், சட்டமியற்றுவதில் ஞானம்மிக்கவன். (குர்ஆன் விரிவுரையாளர்களில் பெரும்பாலோர் இந்த வசனத்தில் கூறப்பட்ட கட்டளை மேற்குறிப்பிட்ட 234வது வசனத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்றே கருதுகிறார்கள்)