×
البقرةவசனம் 246

அல்-முக்தஸர்

أَلَمْ تَرَ إِلَى ٱلْمَلَإِ مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنۢ بَعْدِ مُوسَىٰٓ إِذْ قَالُوا۟ لِنَبِىٍّ لَّهُمُ ٱبْعَثْ لَنَا مَلِكًا نُّقَـٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ ۖ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ أَلَّا تُقَـٰتِلُوا۟ ۖ قَالُوا۟ وَمَا لَنَآ أَلَّا نُقَـٰتِلَ فِى سَبِيلِ ٱللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَـٰرِنَا وَأَبْنَآئِنَا ۖ فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ تَوَلَّوْا۟ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ ۗ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّـٰلِمِينَ ﴿٢٤٦﴾

தூதரே! இஸ்ராயீலின் மக்களில் மூசாவின் காலத்திற்குப்பின் வாழ்ந்த கண்ணியமானவர்களின் செய்தி உமது அறிவுக்கு எட்டவில்லையா? அவர்கள் தங்களின் தூதரிடம் கூறினார்கள்: எங்களுக்காக ஒரு அரசனை ஏற்படுத்துங்கள். நாங்கள் அவருடன் சேர்ந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம். அதற்கு அவர்களின் தூதர் கூறினார்: அல்லாஹ் உங்கள்மீது போரை கடமையாக்கி, நீங்கள் அவனுடைய பாதையில் போரிடாமல் இருக்கலாம் அல்லவா? அவருடைய எண்ணத்தை மறுத்தவர்களாகக் கூறினார்கள், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதற்கான காரணிகள் அனைத்தையும் நாங்கள் பெற்றிருந்தும் எது அவனுடைய பாதையில் போரிடுவதை விட்டும் எங்களைத் தடுக்கும்? எங்களின் எதிரிகள் எங்களின் நாட்டை விட்டு எங்களை வெளியேற்றியுள்ளார்கள்; எங்களின் பிள்ளைகளைக் கைதிகளாகப் பிடித்துள்ளார்கள். எங்களின் நாட்டையும் பிள்ளைகளையும் மீட்டுவதற்காக நாங்கள் போரிடுவோம். அல்லாஹ் அவர்கள்மீது போரைக் கடமையாக்கியபோது அவர்களில் சிலரைத்தவிர மற்றவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றாது புறக்கணித்துவிட்டார்கள். அல்லாஹ்விடம் அளித்த வாக்குறுதியை முறித்து அவனுடைய கட்டளைகளைப் புறக்கணித்த அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிந்தவன். அதற்கான தண்டனையை அவன் அவர்களுக்கு வழங்கிடுவான்.