×
البقرةவசனம் 251

அல்-முக்தஸர்

فَهَزَمُوهُم بِإِذْنِ ٱللَّهِ وَقَتَلَ دَاوُۥدُ جَالُوتَ وَءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ وَٱلْحِكْمَةَ وَعَلَّمَهُۥ مِمَّا يَشَآءُ ۗ وَلَوْلَا دَفْعُ ٱللَّهِ ٱلنَّاسَ بَعْضَهُم بِبَعْضٍ لَّفَسَدَتِ ٱلْأَرْضُ وَلَـٰكِنَّ ٱللَّهَ ذُو فَضْلٍ عَلَى ٱلْعَـٰلَمِينَ ﴿٢٥١﴾

அல்லாஹ்வின் அனுமதிகொண்டு தாலூத்தின் படைகள் ஜாலூத்தின் படைகளைத் தோற்கடித்தது. தாவூத் ஜாலூத்தைக் கொன்றார். அல்லாஹ் அவருக்கு ஆட்சியதிகாரத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கினான். தான் நாடிய பல்வேறு கலைகளை அவருக்குக் கற்றுக்கொடுத்தான். இவ்வுலகத்திலும் மறுவுலகத்திலும் நன்மைதரக்கூடிய விஷயங்களை அவருக்கு ஒன்றுசேர்த்து வழங்கினான். மக்களில் சிலர் செய்யும் குழப்பத்தை சிலரைக் கொண்டு தடுக்கும் வழிமுறையை அல்லாஹ் ஏற்படுத்தவில்லையெனில் குழப்பவாதிகளின் ஆதிக்கத்தால் பூமி சீர்குலைந்துபோயிருக்கும். ஆயினும் அல்லாஹ் படைப்புகள் அனைத்தின்மீதும் பேரருள்புரிபவனாக இருக்கின்றான்.