அல்-முக்தஸர்
أَلَمْ تَرَ إِلَى ٱلَّذِى حَآجَّ إِبْرَٰهِـۧمَ فِى رَبِّهِۦٓ أَنْ ءَاتَىٰهُ ٱللَّهُ ٱلْمُلْكَ إِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّىَ ٱلَّذِى يُحْىِۦ وَيُمِيتُ قَالَ أَنَا۠ أُحْىِۦ وَأُمِيتُ ۖ قَالَ إِبْرَٰهِـۧمُ فَإِنَّ ٱللَّهَ يَأْتِى بِٱلشَّمْسِ مِنَ ٱلْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ ٱلْمَغْرِبِ فَبُهِتَ ٱلَّذِى كَفَرَ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلظَّـٰلِمِينَ ﴿٢٥٨﴾
தூதரே! இப்ராஹீமிடம் இறைவனின் ௐரிறைக்கொள்கை குறித்து திமிராக தர்க்கம் செய்த பாவியை உமக்குத் தெரியுமா? இதற்கான காரணம், அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியிருந்து அவன் வரம்புமீறியதே. இப்ராஹீம் அவனிடம் தம் இறைவனின் பண்புகளைக்குறித்து தெளிவுபடுத்தியவராகக் கூறினார்: என் இறைவன்தான் படைப்புகளுக்கு உயிரளிக்கிறான்; மரணமும் அளிக்கின்றான். அதற்கு அவன் திமிராகக் கூறினான்:நானும்தான் உயிர் கொடுக்கின்றேன்; மரணமும் அளிக்கின்றேன். சிலரை மன்னித்து உயிர்வாழ அனுமதிக்கின்றேன். சிலரைக் கொன்று மரணிக்கச் செய்கின்றேன்.அதற்கு இப்ராஹீம் இன்னுமொரு பெரும் வாதத்தை பின்வருமாறு முன்வைத்தார்: நான் வணங்கும் என் இறைவன் சூரியனைக் கிழக்கிலிருந்து கொண்டுவருகிறான். நீ சூரியனை மேற்கிலிருந்து கொண்டுவா பார்ப்போம். திமிர் பிடித்த பாவி திகைப்படைந்துவிட்டான். இந்த வாதத்தின் வலிமையினால் வாயடைத்துப்போனான். அநியாயக்காரர்களின் அநியாயத்தினாலும் வரம்புமீறலினாலும் அல்லாஹ் ஒருபோதும் அவர்களுக்கு வழிகாட்டமாட்டான்.