×
البقرةவசனம் 260

அல்-முக்தஸர்

وَإِذْ قَالَ إِبْرَٰهِـۧمُ رَبِّ أَرِنِى كَيْفَ تُحْىِ ٱلْمَوْتَىٰ ۖ قَالَ أَوَلَمْ تُؤْمِن ۖ قَالَ بَلَىٰ وَلَـٰكِن لِّيَطْمَئِنَّ قَلْبِى ۖ قَالَ فَخُذْ أَرْبَعَةً مِّنَ ٱلطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ ٱجْعَلْ عَلَىٰ كُلِّ جَبَلٍ مِّنْهُنَّ جُزْءًا ثُمَّ ٱدْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا ۚ وَٱعْلَمْ أَنَّ ٱللَّهَ عَزِيزٌ حَكِيمٌ ﴿٢٦٠﴾

தூதரே! இப்ராஹீம் தம் இறைவனிடம்: என் இறைவனே! நீ இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனது பார்வைக்குக் காட்டு என்று கேட்டதை நினைத்துப் பார்ப்பீராக. அதற்கு அவன், நீர் இந்த விஷயத்தை நம்பவில்லையா? என்று கேட்டான். அதற்கு அவர், ஆம், நம்புகிறேன். ஆயினும் என் மனதிருப்தியை இன்னும் அதிகரிக்கவே இவ்வாறு கேட்கிறேன் என்றார். அல்லாஹ் அவருக்குப் பின்வருமாறு கட்டளையிட்டான்: நான்கு பறவைகளை எடுத்துக் கொள்வீராக. அவற்றை உம்பக்கம் சேர்த்து துண்டுதுண்டாக அறுப்பீராக. பின்னர் உம்மைச் சுற்றிலுமுள்ள ஒவ்வொரு மலையிலும் அவற்றில் ஒரு பகுதியை வைப்பீராக. பின்னர் அவற்றை நீர் அழைப்பீராக, அவை உயிர்பெற்று உம்மிடம் விரைந்து வரும். இப்ராஹீமே! அல்லாஹ் தன் அதிகாரத்தில் யாவற்றையும் மிகைத்தவன் என்பதையும் தான் வழங்கும் கட்டளைகளில் ஞானம்மிக்கவன் என்பதையும் அறிந்துகொள்வீராக.