அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تُبْطِلُوا۟ صَدَقَـٰتِكُم بِٱلْمَنِّ وَٱلْأَذَىٰ كَٱلَّذِى يُنفِقُ مَالَهُۥ رِئَآءَ ٱلنَّاسِ وَلَا يُؤْمِنُ بِٱللَّهِ وَٱلْيَوْمِ ٱلْـَٔاخِرِ ۖ فَمَثَلُهُۥ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُۥ وَابِلٌ فَتَرَكَهُۥ صَلْدًا ۖ لَّا يَقْدِرُونَ عَلَىٰ شَىْءٍ مِّمَّا كَسَبُوا۟ ۗ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْكَـٰفِرِينَ ﴿٢٦٤﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் செய்த தர்மங்களின் நன்மைகளை தர்மம் பெற்றவரிடம் சொல்லிக்காட்டியும், அவருக்கு தொல்லைகொடுத்தும் வீணாக்கிவிடாதீர்கள். இவ்வாறு செய்பவர்களுக்கு உதாரணம் மக்கள் தன்னைப் பார்க்க வேண்டும், புகழ வேண்டும் என்பதற்காக தன் செல்வங்களைச் செலவு செய்பவனைப்போன்றது. அவன் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாத நிராகரிப்பாளனாவான். அதற்கு உதாரணம் ஒரு வழுக்குப்பாறையில் இருக்கும் மண்ணைப்போன்றதாகும். அதன்மீது பெருமழை பெய்து பாறையில் இருந்த மண்ணை முற்றிலும் இல்லாமலாக்கிவிட்டது. இவ்வாறுதான் மக்களிடம் காட்டுவதற்காக செலவுசெய்பவர்களது நன்மைகளும் அடிபட்டுச்சென்றுவிடும். அல்லாஹ்விடம் எதனையும் பெறமாட்டார்கள். அல்லாஹ் தன்னை நிராகரிப்பவர்களுக்கு தான் விரும்பும் விஷயங்களின் பக்கமும் அவர்களுக்கு பயனுள்ளவற்றிற்கும் வழிகாட்ட மாட்டான்.