அல்-முக்தஸர்
يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوٓا۟ أَنفِقُوا۟ مِن طَيِّبَـٰتِ مَا كَسَبْتُمْ وَمِمَّآ أَخْرَجْنَا لَكُم مِّنَ ٱلْأَرْضِ ۖ وَلَا تَيَمَّمُوا۟ ٱلْخَبِيثَ مِنْهُ تُنفِقُونَ وَلَسْتُم بِـَٔاخِذِيهِ إِلَّآ أَن تُغْمِضُوا۟ فِيهِ ۚ وَٱعْلَمُوٓا۟ أَنَّ ٱللَّهَ غَنِىٌّ حَمِيدٌ ﴿٢٦٧﴾
அல்லாஹ்வின்மீது நம்பிக்கைகொண்டு, அவனுடைய தூதரைப் பின்பற்றியவர்களே! நீங்கள் சம்பாதித்த தூய்மையான, ஹலாலான செல்வங்களிலிருந்தும், நாம் பூமியின் தாவரங்களிலிருந்து உங்களுக்காக வெளிப்படுத்தியவற்றிலிருந்தும் செலவு செய்யுங்கள். மட்டமான பொருள்களை செலவுசெய்ய எண்ணாதீர்கள். உங்களுக்கு அத்தகைய பொருள்கள் வழங்கப்பட்டால் முகம்சுளித்தவர்களாகத்தானே அவற்றை ஏற்றுக்கொள்வீர்கள். உங்களுக்கு விரும்பாததை எவ்வாறு நீங்கள் அல்லாஹ்வுக்கு விரும்புகிறீர்கள்? அறிந்துகொள்ளுங்கள், உங்களின் செலவீனங்களை விட்டும் அல்லாஹ் தேவையற்றவன்; அவன் தன் உள்ளமையிலும் செயல்களிலும் புகழுக்குரியவன்.