அல்-முக்தஸர்
هُوَ ٱلَّذِى خَلَقَ لَكُم مَّا فِى ٱلْأَرْضِ جَمِيعًا ثُمَّ ٱسْتَوَىٰٓ إِلَى ٱلسَّمَآءِ فَسَوَّىٰهُنَّ سَبْعَ سَمَـٰوَٰتٍ ۚ وَهُوَ بِكُلِّ شَىْءٍ عَلِيمٌ ﴿٢٩﴾
பூமியிலுள்ள ஆறுகள், மரங்கள் மற்றும் எண்ண முடியாத எத்தனையோ படைப்பினங்களை அல்லாஹ் ஒருவனே உங்களுக்காகப் படைத்திருக்கிறான். அவன் உங்களுக்கு வசப்படுத்தித் தந்ததை அனுபவித்து அவற்றின் மூலம் பயனடைகிறீர்கள். பின்னர் வானத்தைப் படைக்க விரும்பி, அதனை சமமான ஏழு வானங்களாகப் படைத்தான். அவனது அறிவு ஒவ்வொரு பொருளையும் சூழ்ந்துள்ளது.