×
البقرةவசனம் 31

அல்-முக்தஸர்

وَعَلَّمَ ءَادَمَ ٱلْأَسْمَآءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى ٱلْمَلَـٰٓئِكَةِ فَقَالَ أَنۢبِـُٔونِى بِأَسْمَآءِ هَـٰٓؤُلَآءِ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿٣١﴾

ஆதமின் அந்தஸ்தை தெளிவுபடுத்துவதற்காக அவருக்கு உயிரினங்கள், தாவரங்கள் மற்றும் உலகிலுள்ள அனைத்தின் பெயா்களையும், வார்த்தைகளையும், விளக்கங்களையும் அல்லாஹ் கற்றுக்கொடுத்தான். பின்னர் வானவர்களிடம் அப்பெயர்குறிக்கப்பட்ட பொருட்களை முன்வைத்து, இந்த படைப்பைவிட நீங்கள்தாம் கண்ணியமானவா்கள் என்ற உங்களின் கூற்றில் நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்றான்.