×
البقرةவசனம் 37

அல்-முக்தஸர்

فَتَلَقَّىٰٓ ءَادَمُ مِن رَّبِّهِۦ كَلِمَـٰتٍ فَتَابَ عَلَيْهِ ۚ إِنَّهُۥ هُوَ ٱلتَّوَّابُ ٱلرَّحِيمُ ﴿٣٧﴾

உள்ளுதிப்பின் மூலம் அல்லாஹ் ஆதமுக்குக் கற்றுத்தந்த பிரார்த்தனையைக் கொண்டு ஆதம் அவனிடம் பிரார்த்தனை செய்தார். அதுதான் பின்வரும் பிரார்த்தனையாகும். எங்கள் இறைவா, எங்களுக்கு நாங்களே அநீதி இழைத்துக் கொண்டோம். நீ எங்களை மன்னித்து, எங்கள்மீது கருணை காட்டவில்லையெனில் நாங்கள் இழப்படைந்தவர்களாகி விடுவோம். (7:23) அல்லாஹ் அவருடைய பாவமன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரை மன்னித்தான். அல்லாஹ், தன் அடியார்களின் பாவமன்னிப்பை ஏற்றுக் கொள்ளக்கூடியவனாக, அவர்களின் விஷயத்தில் கருணைமிக்கவனாக இருக்கின்றான்.