×
البقرةவசனம் 4

அல்-முக்தஸர்

وَٱلَّذِينَ يُؤْمِنُونَ بِمَآ أُنزِلَ إِلَيْكَ وَمَآ أُنزِلَ مِن قَبْلِكَ وَبِٱلْـَٔاخِرَةِ هُمْ يُوقِنُونَ ﴿٤﴾

அவர்கள் மறுமைநாள் போன்ற தங்களின் புலனுணர்வுகளால் உணரமுடியாத, தங்களை விட்டும் மறைவாக இருக்கின்ற, அல்லாஹ்வும் அவனது தூதரும் அறிவித்த மறைவானவற்றை நம்புகிறார்கள். தொழுகையை, அல்லாஹ் ஏற்படுத்திய நிபந்தனைகள், கடமைகள் மற்றும் அதன் சுன்னத்துகளோடு நிலைநாட்டுகிறார்கள். அல்லாஹ் தங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து, அவனது திருப்தியை நாடி, கடமையாக்கப்பட்ட தர்மமாகவோ கடமையாக்கப்படாத உபரியான தர்மமாகவோ செலவு செய்கிறார்கள். தூதரே! அவர்கள் உங்கள்மீது இறக்கப்பட்ட வஹ்யியையும் உங்களுக்கு முன்னர் வாழ்ந்த தூதர்கள்மீது இறக்கப்பட்டவற்றையும் பாகுபாடின்றி நம்புகிறார்கள். மறுமையின் மீதும் அங்கு வழங்கப்படும் கூலி மற்றும் தண்டனையின் மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.