×
البقرةவசனம் 48

அல்-முக்தஸர்

وَٱتَّقُوا۟ يَوْمًا لَّا تَجْزِى نَفْسٌ عَن نَّفْسٍ شَيْـًٔا وَلَا يُقْبَلُ مِنْهَا شَفَـٰعَةٌ وَلَا يُؤْخَذُ مِنْهَا عَدْلٌ وَلَا هُمْ يُنصَرُونَ ﴿٤٨﴾

நான் கட்டளையிட்டவற்றை செயல்படுத்தி, தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி மறுமைநாளில் உங்களுக்கும் தண்டனைக்கும் இடையே தடுப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நாளில் எவரும் மற்றவருக்கு எந்தப் பயனையும் அளித்துவிட முடியாது. எவரிடமிருந்து தீங்கை அகற்றுதல் அல்லது நன்மையைக் பெற்றுக்கொள்வதற்கான எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப்படாது, ஆயினும் அல்லாஹ்வின் அனுமதியுடன் தவிர. ஒருவர் பூமி நிறைய தங்கத்தை ஈடாகக் கொண்டு வந்தாலும் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்படாது. அந்நாளில் அவர்களுக்கு எந்தவொரு உதவியாளரும் கிடையாது. பரிந்துரையாளரோ ஈட்டுத்தொகையோ உதவியாளரோ பயனளிக்காத போது எங்கே ஓடமுடியும்?