×
البقرةவசனம் 50

அல்-முக்தஸர்

وَإِذْ فَرَقْنَا بِكُمُ ٱلْبَحْرَ فَأَنجَيْنَـٰكُمْ وَأَغْرَقْنَآ ءَالَ فِرْعَوْنَ وَأَنتُمْ تَنظُرُونَ ﴿٥٠﴾

நாம் உங்கள்மீது பொழிந்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்களுக்காக கடலைப் பிளந்து அதில் நீங்கள் செல்லும் காய்ந்த பாதையை உருவாக்கினோம். உங்களைக் காப்பாற்றி நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே உங்களின் கண்முன்னால் ஃபிர்அவ்னையும் அவனைப் பின்பற்றியவர்களையும் மூழ்கடித்தோம்.