×
البقرةவசனம் 83

அல்-முக்தஸர்

وَإِذْ أَخَذْنَا مِيثَـٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَانًا وَذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَـٰمَىٰ وَٱلْمَسَـٰكِينِ وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ ﴿٨٣﴾

இஸ்ராயீலின் மக்களே! நீங்கள் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும், அவனைத்தவிர வேறு யாரையும் வணங்கக்கூடாது; தாய்தந்தையர், உறவினர், அநாதைகள், ஏழைகள், தேவையுடையவர்கள் ஆகியோருடன் நல்லமுறையில் நடந்துகொள்ள வேண்டும்; நன்மையை ஏவி, தீமையைத் தடுக்கும்போது மக்களிடம் கடினமான வார்த்தைகைளைப் பிரயோகிக்காமல் நல்ல வார்த்தைகளைக்கொண்டு அவர்களோடு பேசுங்கள்; நான் ஏவியமுறைப்படி தொழுகையைப் பரிபூரணமாக நிறைவேற்றுங்கள்; ஸகாத்தை உரியவர்களுக்கு முழு மனதுடன் அளித்துவிடுங்கள் என்று நாம் உங்களிடம் உறுதியான வாக்குறுதி வாங்கியதை நினைவுகூருங்கள். ஆனால் அதன் பின்னரும் நீங்கள் அளித்த வாக்குறுதியை மீறி பின்வாங்கிச் சென்றீர்கள். உங்களில் யாரை அல்லாஹ் பாதுகாத்தானோ அவர்களைத் தவிர. அவர்கள் அல்லாஹ்விடம் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றினார்கள்.