×
طهவசனம் 115

அல்-முக்தஸர்

وَلَقَدْ عَهِدْنَآ إِلَىٰٓ ءَادَمَ مِن قَبْلُ فَنَسِىَ وَلَمْ نَجِدْ لَهُۥ عَزْمًا ﴿١١٥﴾

நாம் ஏற்கனவே, குறிப்பிட்ட அந்த மரத்திலிருந்து உண்ணக்கூடாது என்று ஆதமுக்கு வஸிய்யத் செய்து இருந்தோம். அதனைவிட்டும் தடுத்து அதன் விளைவையும் தெளிவுபடுத்தினோம். ஆதம் பொறுமையை மேற்கொள்ளாமல் வஸிய்யத்தை மறந்து அந்த மரத்திலிருந்து உண்டுவிட்டார். அவரிடம் நாம் நம் வஸிய்யத்தை பேணி நடக்கும் பலமான உறுதியைக் காணவில்லை.