×
طهவசனம் 123

அல்-முக்தஸர்

قَالَ ٱهْبِطَا مِنْهَا جَمِيعًۢا ۖ بَعْضُكُمْ لِبَعْضٍ عَدُوٌّ ۖ فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّى هُدًى فَمَنِ ٱتَّبَعَ هُدَاىَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَىٰ ﴿١٢٣﴾

அல்லாஹ் ஆதமுக்கும் ஹவ்வாவுக்கும் கூறினான்: “நீங்கள் இருவரும் இப்லீசும் சுவனத்திலிருந்து இறங்கிவிடுங்கள். அவன் உங்களுக்கும் நீங்கள் அவனுக்கும் எதிரியாவீர்கள். என் புறத்திலிருந்து என் பாதையை தெளிவுபடுத்தக்கூடிய வழிகாட்டல் உங்களிடம் வந்தால் உங்களில் யார் அதனைப் பின்பற்றி அதன்படி செயல்பட்டு, அதனை விட்டும் நெறிபிறழமாட்டாரோ அவர் சத்தியத்தைவிட்டு வழிதவறவும் மாட்டார்; மறுமை நாளில் வேதனையை அனுபவிக்கும் துர்பாக்கியசாலியாகவும் ஆகமாட்டார். மாறாக அல்லாஹ் அவரை சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான்.