×
طهவசனம் 132

அல்-முக்தஸர்

وَأْمُرْ أَهْلَكَ بِٱلصَّلَوٰةِ وَٱصْطَبِرْ عَلَيْهَا ۖ لَا نَسْـَٔلُكَ رِزْقًا ۖ نَّحْنُ نَرْزُقُكَ ۗ وَٱلْعَـٰقِبَةُ لِلتَّقْوَىٰ ﴿١٣٢﴾

தூதரே!- உம் குடும்பத்தினரை தொழுகையை நிறைவேற்றுமாறு ஏவுவீராக. அதனை நிறைவேற்றுவதில் பொறுமையாக நிலைத்திருப்பீராக. நாம் உமக்காகவோ மற்றவர்களுக்காகவோ உம்மிடம் வாழ்வாதாரம் கேட்கவில்லை. நாமே உமக்கு வாழ்வாதாரம் அளிக்க பொறுப்பேற்றுள்ளோம். அல்லாஹ்வின் கட்டளைகளைச் செயல்படுத்தி அவன் தடுத்துள்ளவற்றிலிருந்து விலகி அவனை அஞ்சக்கூடியவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் புகழப்படக்கூடிய முடிவு கிடைக்கும்.