×
طهவசனம் 134

அல்-முக்தஸர்

وَلَوْ أَنَّآ أَهْلَكْنَـٰهُم بِعَذَابٍ مِّن قَبْلِهِۦ لَقَالُوا۟ رَبَّنَا لَوْلَآ أَرْسَلْتَ إِلَيْنَا رَسُولًا فَنَتَّبِعَ ءَايَـٰتِكَ مِن قَبْلِ أَن نَّذِلَّ وَنَخْزَىٰ ﴿١٣٤﴾

நிச்சயமாக நாம் தூதரை அனுப்புவதற்கும் வேதத்தை இறக்குவதற்கும் முன்னரே தூதரை பொய்பிக்கும் இவர்களை இவர்களின் நிராகரிப்பினாலும் பிடிவாதத்தினாலும் ஏதேனும் வேதனையை இறக்கி அழித்து விட்டால் மறுமை நாளில் இவர்கள் இறைவனிடம் தங்களின் நிராகரிப்பிற்குச் சாக்குப்போக்காக, “-எங்களின் இறைவன்- உலகில் எங்களிடம் ஒரு தூதரை அனுப்பியிருக்கக்கூடாதா? அவ்வாறு அனுப்பியிருந்தால், உன் வேதனையால் கிடைக்கும் இந்த இழிவு ஏற்படமுன், அவர் மீது நம்பிக்கை கொண்டு, அவர் கொண்டுவந்த அத்தாட்சிகளைப் பின்பற்றியிருப்போமே!” என்று கூறுவார்கள்.