×
طهவசனம் 40

அல்-முக்தஸர்

إِذْ تَمْشِىٓ أُخْتُكَ فَتَقُولُ هَلْ أَدُلُّكُمْ عَلَىٰ مَن يَكْفُلُهُۥ ۖ فَرَجَعْنَـٰكَ إِلَىٰٓ أُمِّكَ كَىْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ ۚ وَقَتَلْتَ نَفْسًا فَنَجَّيْنَـٰكَ مِنَ ٱلْغَمِّ وَفَتَنَّـٰكَ فُتُونًا ۚ فَلَبِثْتَ سِنِينَ فِىٓ أَهْلِ مَدْيَنَ ثُمَّ جِئْتَ عَلَىٰ قَدَرٍ يَـٰمُوسَىٰ ﴿٤٠﴾

பெட்டியை பின்தொடர்ந்துகொண்டே உம் சகோதரி சென்றாள். அக்குழந்தையை எடுத்தவர்களிடம் உம் சகோதரி கூறினாள்: “நான் உங்களுக்கு இக்குழந்தையை பாதுகாத்து பாலூட்டி, வளர்க்கும் ஒருவரைக் குறித்து அறிவிக்கட்டுமா?” உம் தாய் மகிழ்ச்சியடைவதற்காக, உம்மைக் குறித்து கவலையடையாமல் இருப்பதற்காக உம்மை அவளிடம் திரும்பச் செய்து உம்மீது அருள்புரிந்தோம். நீர் கிப்தி குலத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றுவிட்டீர். அதனால் கிடைக்கும் தண்டனையிலிருந்து நாம் உம்மைக் காப்பாற்றி உம்மீது அருள்புரிந்தோம். உமக்கு ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட ஒவ்வொரு சோதனையிலிருந்தும் உம்மை விடுவித்தோம். நீர் மத்யன்வாசிகளிடம் நீண்ட காலம் தங்கியிருந்தீர். பின்னர் மூஸாவே உரையாடுவதற்கு உமக்கு விதிக்கப்பட்ட குறிப்பிட்ட நேரத்தில் வந்தீர்.