அல்-முக்தஸர்
قَالَ ءَامَنتُمْ لَهُۥ قَبْلَ أَنْ ءَاذَنَ لَكُمْ ۖ إِنَّهُۥ لَكَبِيرُكُمُ ٱلَّذِى عَلَّمَكُمُ ٱلسِّحْرَ ۖ فَلَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُم مِّنْ خِلَـٰفٍ وَلَأُصَلِّبَنَّكُمْ فِى جُذُوعِ ٱلنَّخْلِ وَلَتَعْلَمُنَّ أَيُّنَآ أَشَدُّ عَذَابًا وَأَبْقَىٰ ﴿٧١﴾
சூனியக்காரர்கள் நம்பிக்கைகொண்டதை ஃபிர்அவ்ன் மறுத்தவனாக, அவர்களை எச்சரித்தவனாகக் கூறினான்: “நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன்னரே நீங்கள் மூஸாவின் மீது நம்பிக்கைகொண்டு விட்டீர்களா? -சூனியக்காரர்களே- நிச்சயமாக மூஸாதான் உங்களுக்கு சூனியத்தைக் கற்றுக்கொடுத்த உங்களின் குரு. உங்களில் ஒவ்வொருவரின் மறுகால் மறுகையை வெட்டிவிடுவேன். பேரீச்சை மரத்தின் தண்டுகளில் நீங்கள் சாகும்வரை உங்களின் உடல்களை கட்டிவிடுவேன். மற்றவர்களுக்கு படிப்பினையாக நீங்கள் இருப்பீர்கள். நம்மில் யார் வேதனையளிப்பதில் கடுமையானவர்? யாருடைய வேதனை நிலையானது? என்பதில் நானா? அல்லது மூஸாவின் இறைவனா? என்பதை நிச்சயமாக நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.