×
طهவசனம் 73

அல்-முக்தஸர்

إِنَّآ ءَامَنَّا بِرَبِّنَا لِيَغْفِرَ لَنَا خَطَـٰيَـٰنَا وَمَآ أَكْرَهْتَنَا عَلَيْهِ مِنَ ٱلسِّحْرِ ۗ وَٱللَّهُ خَيْرٌ وَأَبْقَىٰٓ ﴿٧٣﴾

எங்களின் இறைவன் எங்களின் முந்தைய நிராகரிப்பு மற்றும் ஏனைய பாவங்களையும், நீ எங்களைக் கட்டாயப்படுத்தி கற்கவும், ஈடுபடவும், மூஸாவுடன் போட்டியிடவும் செய்த சூனியத்தினால் ஏற்பட்ட பாவத்தையும் மன்னித்துவிடுவான் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவன் மீது நம்பிக்கைகொண்டு விட்டோம். நீ எங்களுக்கு வாக்களித்ததைவிட கூலி வழங்குவதில் அல்லாஹ்வே சிறந்தவன். நீ எங்களை அச்சுறுத்திய வேதனையை விட அவனே நிலையான வேதனையளிக்கக்கூடியவன்.