×
طهவசனம் 80

அல்-முக்தஸர்

يَـٰبَنِىٓ إِسْرَٰٓءِيلَ قَدْ أَنجَيْنَـٰكُم مِّنْ عَدُوِّكُمْ وَوَٰعَدْنَـٰكُمْ جَانِبَ ٱلطُّورِ ٱلْأَيْمَنَ وَنَزَّلْنَا عَلَيْكُمُ ٱلْمَنَّ وَٱلسَّلْوَىٰ ﴿٨٠﴾

ஃபிர்அவ்னையும் அவனுடைய படைகளையும் விட்டு இஸ்ராயீலின் மக்களை பாதுகாத்த பிறகு நாம் அவர்களிடம் கூறினோம்: “இஸ்ராயீலின் மக்களே! நாம் உங்களின் எதிரிகளிடமிருந்து உங்களைக் காப்பாற்றியுள்ளோம். தூர் மலைக்கு பக்கத்தில் இருக்கின்ற பள்ளத்தாக்கின் வலது பக்கத்திலிருந்து நாம் மூஸாவுடன் உரையாடுவோம் என்று உங்களுக்கு வாக்களித்துள்ளோம். நீங்கள் பாலைவனத்தில் இருந்தபோது (மன்னு எனும்) தேன் போன்ற இனிப்புப் பானத்தையும் காடை போன்ற (சல்வா எனும்) நல்ல மாமிசமுடைய சிறு பறவையையும் உங்களுக்கு எங்களின் அருளாக இறக்கினோம்.