×
طهவசனம் 94

அல்-முக்தஸர்

قَالَ يَبْنَؤُمَّ لَا تَأْخُذْ بِلِحْيَتِى وَلَا بِرَأْسِىٓ ۖ إِنِّى خَشِيتُ أَن تَقُولَ فَرَّقْتَ بَيْنَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ وَلَمْ تَرْقُبْ قَوْلِى ﴿٩٤﴾

மூஸா ஹாரூனின் செயலைக் கண்டிக்கும் விதமாக அவரது தலை முடியையும், தாடியையும் பிடித்து இழுத்தபோது ஹாரூன் அவரிடம் அன்பாக கூறினார்: “என் தாடியையோ, தலை முடியையோ பிடித்து இழுக்காதீர். நிச்சயமாக நான் அவர்களிடம் இருந்ததற்கு தக்க காரணம் உள்ளது. ஏனெனில் நான் அவர்களை தனியே விட்டுவிட்டால் அவர்கள் பிரிந்துவிடுவார்கள். அப்பொழுது “நீர் அவர்களிடையே பிரிவினை ஏற்படுத்தி விட்டீர். அவர்கள் விஷயத்தில் என் அறிவுரையை பேணி நடக்கவில்லை” என்று நீர் என்னைப் பார்த்து கூறுவீர் என்று அஞ்சினேன்.