×
طهவசனம் 96

அல்-முக்தஸர்

قَالَ بَصُرْتُ بِمَا لَمْ يَبْصُرُوا۟ بِهِۦ فَقَبَضْتُ قَبْضَةً مِّنْ أَثَرِ ٱلرَّسُولِ فَنَبَذْتُهَا وَكَذَٰلِكَ سَوَّلَتْ لِى نَفْسِى ﴿٩٦﴾

சாமிரி மூஸாவிடம் கூறினான்: “அவர்கள் காணாததை நான் கண்டேன். ஜிப்ரீலை ஒரு குதிரையின்மீது கண்டேன். அவருடைய குதிரையின் கால்தடத்திலிருந்து ஒருபிடி மண்ணை எடுத்து அதனை காளைக் கன்றின் வடிவத்தில் உருக்கப்பட்ட ஆபரணத்தில் எறிந்தேன். அதிலிருந்து சப்தம் எழுப்பக்கூடிய காளைக் கன்றின் உடல் தோன்றியது. இவ்வாறு என் மனம் நான் செய்தவற்றை எனக்கு அழகுபடுத்திக் காட்டியது.