அல்-முக்தஸர்
إِنَّمَآ إِلَـٰهُكُمُ ٱللَّهُ ٱلَّذِى لَآ إِلَـٰهَ إِلَّا هُوَ ۚ وَسِعَ كُلَّ شَىْءٍ عِلْمًا ﴿٩٨﴾
மனிதர்களே!- நிச்சயமாக வணக்கத்திற்குரிய உங்களின் உண்மையான இறைவன் அல்லாஹ்தான். அவனைத் தவிர வேறு உண்மையான இறைவன் இல்லை. அவன் எல்லாவற்றையும் அறிவால் சூழ்ந்தவன். எதனைப் பற்றிய அறிவும் அவனை விட்டு தப்பிவிடாது.