அல்-முக்தஸர்
وَإِذَا رَءَاكَ ٱلَّذِينَ كَفَرُوٓا۟ إِن يَتَّخِذُونَكَ إِلَّا هُزُوًا أَهَـٰذَا ٱلَّذِى يَذْكُرُ ءَالِهَتَكُمْ وَهُم بِذِكْرِ ٱلرَّحْمَـٰنِ هُمْ كَـٰفِرُونَ ﴿٣٦﴾
தூதரே!- இந்த இணைவைப்பாளர்கள் உம்மைப் பார்த்தால் பரிகாசமாக எடுத்துக் கொள்கிறார்கள். “இவர்தான் நீங்கள் வணங்கும் தெய்வங்களைத் திட்டக்கூடியவரா?” என்று கூறி தங்களைப் பின்பற்றுபவர்களிடம் வெறுப்பை ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் உம்மைப் பரிகாசம் செய்வதுடன் அவர்களுக்காக இறக்கப்பட்ட குர்ஆனையும் மறுத்து, அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய அருட்கொடைகளையும் மறுக்கிறார்கள். எனவே அனைத்துத் தீமைகளும் ஒன்றுசேர இருப்பதால் அவர்களே குறை கூறப்பட மிகத் தகுதியானவர்கள்.