×
الأنبياءவசனம் 47

அல்-முக்தஸர்

وَنَضَعُ ٱلْمَوَٰزِينَ ٱلْقِسْطَ لِيَوْمِ ٱلْقِيَـٰمَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْـًٔا ۖ وَإِن كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ۗ وَكَفَىٰ بِنَا حَـٰسِبِينَ ﴿٤٧﴾

நாம் மறுமையில் மனிதர்களின் செயல்களை எடைபோடுவதற்காக நியாயமான தராசுகளை நிறுவுவோம். நன்மைகள் குறைக்கப்பட்டோ தீமைகள் அதிகரிக்கப்பட்டோ எவர் மீதும் அநீதி இழைக்கப்படாது. ஒருவரின் எடை மிகவும் குறைவானதாக கடுகளவு செயல் போன்று இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். எங்களது அடியார்களின் செயல்களைக் கணக்கிடுவதற்கு நாமே போதுமானவர்களாவோம்.