×
الأنبياءவசனம் 93

அல்-முக்தஸர்

وَتَقَطَّعُوٓا۟ أَمْرَهُم بَيْنَهُمْ ۖ كُلٌّ إِلَيْنَا رَٰجِعُونَ ﴿٩٣﴾

மக்கள் பலவாறாகப் பிரிந்து விட்டார்கள். அவர்களில் சிலர் அல்லாஹ் ஒருவனையே வணங்கக்கூடியவர்களாகவும் சிலர் அவனுக்கு இணைகளை ஏற்படுத்தக்கூடியவர்களாகவும் சிலர் அவனை நிராகரிப்பவர்களாகவும் சிலர் நம்பிக்கையாளர்களாகவும் ஆகிவிட்டார்கள். இவர்கள் அனைவரும் மறுமை நாளில் நம்மிடம் மட்டுமே திரும்ப வேண்டும். நாம் அவர்களின் செயல்களுக்கேற்ப அவர்களுக்குக் கூலி வழங்குவோம்.