அல்-முக்தஸர்
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَٱلَّذِينَ هَادُوا۟ وَٱلصَّـٰبِـِٔينَ وَٱلنَّصَـٰرَىٰ وَٱلْمَجُوسَ وَٱلَّذِينَ أَشْرَكُوٓا۟ إِنَّ ٱللَّهَ يَفْصِلُ بَيْنَهُمْ يَوْمَ ٱلْقِيَـٰمَةِ ۚ إِنَّ ٱللَّهَ عَلَىٰ كُلِّ شَىْءٍ شَهِيدٌ ﴿١٧﴾
நிச்சயமாக அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட இந்த சமூகத்தில் உள்ளவர்கள், யூதர்கள், சாபியீன்கள் - சில இறைத்தூதர்களைப் பின்பற்றியவர்கள்- கிருஸ்தவர்கள், நெருப்பு வணங்கிகள், சிலை வணங்கிகள் ஆகியோரிடையே மறுமை நாளில் நிச்சயமாக அல்லாஹ் தீர்ப்பளிப்பான். அவர்களில் நம்பிக்கைகொண்டவர்களை அல்லாஹ் சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வான். மற்றவர்களை நரகத்தில் புகுத்திவிடுவான். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களின் சொல், செயல் என அனைத்திற்கும் சாட்சியாளனாக இருக்கின்றான். அவற்றில் எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. அவற்றிற்கேற்ப அவன் அவர்களுக்குக் கூலி வழங்குவான்.